மக்களை வதைக்காதீர் உடன் பதவி விலகுங்கள் - கோட்டாபயவிடம் முக்கிய மதத்தலைவர் கோரிக்கை
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
Cardinal Malcolm Ranjith
By Sumithiran
மிகப் பெரிய தடை ராஜபக்ச குடும்பத்தினரே
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மக்களை மேலும் வதைக்காமல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
"இந்த நெருக்கடியான நிலையில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது ராஜபக்ச குடும்பத்தினரே. எனவே, பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளதால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை" - என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை
ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவித்த பேராயர் மேலும் கூறுகையில், "பதவியில் உள்ள ராஜபக்சாக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் இனியும் பதவியில் நீடிக்க அவர்களுக்குத் தார்மீக உரிமை
இல்லை.
மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் ஆட்சி அதிகாரத்தை அவர்கள்
ஒப்படைக்க வேண்டும்" - என்றார்.
