தமிழின அழிப்பு தீர்மானத்துக்கு பிரித்தானிய எம்பிக்கள் ஆதரவுக் குரல்
Sri Lankan Tamils
United Kingdom
By Vanan
இலங்கையில் தமிழினத்தின் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்ட விடயத்தை பிரித்தானிய முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நேற்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த கோரிக்கை மீது உரையாற்றிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறன ஒரு தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு தாம் முயற்சிகளை செய்வதாக உறுதியளித்திருந்தனர்.
பங்கேற்பாளர்கள்
"தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு" - பிரிட்டனில் சிறப்பு மாநாடு |
பிரித்தானியாவின் மனித உரிமைகள் தொடர்பிலான வழக்கறிஞர் பற்றிக் லூயிஸ் தலைமையில் இந்த மாநாடு இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் தாயகத்து அரசியல் செயற்பாட்டாளர்கள், பிரித்தானிய அனைத்து கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்