இடைநிறுத்தப்பட்டுள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை நாட்டுக்கு அழைக்க தீர்மானம்
கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 15 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளரினால் வெளிவிவகார அமைச்சுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலின் படி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சேவைகள் இடைநிறுத்தம்
இதன்படி, இந்தியா (India), அவுஸ்திரேலியா (Australia) , இந்தோனேசியா (Indonesia), ஜப்பான் (Japan), மலேசியா (Malaysia), கென்யா, கியூபா, சீஷெல்ஸ், நேபாளம், மாலைத்தீவு, பிரித்தானியா (United Kingdom), ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுக்கு அவர்களின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நியூயோர்க்கில் (New York) உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் இது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்