ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மொட்டுக் கட்சியின் இறுதி முடிவு இன்று...
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தீர்மானம் இன்று (29) அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கொழும்பில் இடம்பெற்ற வைபவத்தின் பின்னர் அறிவித்தார்.
தாம் எப்போதும் தமது கட்சியின் கருத்திற்கு செவிசாய்ப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் கட்சியின் கருத்தின்படியே செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து எவருக்கும் ஆதரவளிப்பதாகவும், வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க கட்சி இணங்கினால் தாம் அவருக்கும் ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவு
இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எடுக்கும் நிலைப்பாடு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (29) கட்சியின் இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |