இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்: அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, அமைச்சின் அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து சேவையில் பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.
எடுக்கப்பட்ட தீர்மானம்
பெண்கள் இன்னும் சில நாட்களில் பேருந்து ஓட்டுநர்கள், விமானிகள் மற்றும் காவலர்களாக பணியாற்ற முடியும். நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன், பாடசாலை பேருந்துகளை பெண்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கனவும் எனக்கு உள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்." என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்