சாதாரண தர பரீட்சை : பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளுக்கும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறை என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
2024 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L Exam) மார்ச் மாதம்17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
அத்துடன் 3,663 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறும் என அந்த திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் நேற்று (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amith Jayasundara), ”இந்த ஆண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சை அனுமதி அட்டைகள்
சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் நிகழ்நிலையில் மாற்றம் செய்யலாம்.
பரீட்சைகள் திணைக்களம்
அனைத்து பாடசாலை அதிபர்களும் மாணவர்களுக்கு அனுமதி அட்டைகளை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதுடன் இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்காத பாடசாலை மாணவர்கள் தங்கள் அதிபர்கள் மூலம் பரீட்சைகள் திணைக்களத்திடம் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
இதேவேளை தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இது தொடர்பாக பரீட்சைகள் திணைக்களத்திடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்