இறுதி கட்டத்தை எட்டிய மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகள் மற்றும் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு இது செயல்படுத்தப்படுவதாக சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடரபாக சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
சாத்தியமான கோரிக்கைகள்
இலங்கை மின்சார சபையின்(CEB) ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் மிகவும் நல்ல கலந்துரையாடல்களுக்குப் பிறகு, சாத்தியமான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் இந்த செயல்முறையைத் தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்சாரத் துறையின் வளர்ச்சி ஒரு தேசியத் தேவை என்பதைப் புரிந்துகொண்ட ஊழியர்கள், நுகர்வோர், குறிப்பாக தொழிற்சங்கங்கள் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவு இந்த மறுசீரமைப்பு செயல்முறைக்குத் தொடரும் என்று CEB நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |