அநுர அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேசத்தையும் நாடும் எம்பி!
ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியது மற்றும் சட்டமா அதிபருக்கு அழுத்தம் கொடுத்தது குறித்து சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பு இன்று(23.01) நாட்டில் உள்ள அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக விரோத நடவடிக்கை
மேலும், இது அமெரிக்க ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பொதுநலவாய நாடுகள், ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணைக்குழு மற்றும் பல சர்வதேச அமைப்புகள் உட்பட உலகின் அனைத்து நாடுகளின் அரச தலைவர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காதது மற்றும் சட்டமா அதிபருக்கு அழுத்தும் கொடுப்பது உட்பட பல ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுஜீவ சேனசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்படி, இது குறித்து அவசர கவனம் செலுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |