தேர்தலில் போட்டியிடுவதற்குச் சென்று திரும்பிய உத்தியோகத்தர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கை
இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுப்பில் சென்று மீண்டும் கடமைக்கு திரும்பிய வலி. மேற்கு பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வலி. மேற்கு பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் சிலரை பெண் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருடன் இணைந்து பிரதேசசபை செயலாளர் அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதாகவும் அச்சுறுத்துவதாகவும் தொடர்ந்து பழிவாங்கல்களுக்கு உள்ளாக்குவதாகவும் சம்பந்தப்பட்ட திணைக்கள உயர்மட்டத்திற்கு பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது.
பழிவாங்கல்கள்

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வலி. மேற்கு பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரியாக இருப்பவர் மீதும் சிரேஷ்ட வருமான பரிசோதகராக கடமையாற்றுபவர்கள் மீதும் கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கடும் தொனியில் ஒருமையில் பேசி அச்சுறுத்துவதாகவும் குறித்த உத்தியோகத்தர்கள் முறையிட்டுள்ளனர்.
அவர்கள் வேட்பாளர்களாக விடுப்பு பெற்று சென்று தற்சமயம் மீண்டும் பணியில் இணைந்துள்ள போதும் அவர்களின் பணிகளுக்குரிய ஒத்துழைப்பு மற்றும் பணிகளுக்கான மரியாதை வழங்குவதில்லை என்று த உத்தியோதர்கள் உயர்மட்டத்திற்கு முறையிட்டுள்ளனர்.
