பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்குக் கடும் வெப்பம் குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உயர்மட்ட வானிலை ஆய்வு மையமான மெட் ஆஃபீஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை ஜூன் 24 ஆம் திகதி புதன்கிழமை காலை 09:00 மணி முதல் ஜூன் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 21:00 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்கள்
இந்த எச்சரிக்கையில் லண்டன் மற்றும் பர்மிங்காம் ஆகிய முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் வரலாற்றுச் சிறப்புமிக்க பாத் நகரமும் அடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் தற்போது பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையான 35.6°C, 1976 ஜூன் மாதம் சவுத்தாம்ப்டனிலும் மற்றும் 1957 ஜூன் மாதம் கேம்டன் சதுக்கத்திலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் இந்தச் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புள்ளது என வானிலை முன்னறிவிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |