யாழில் உலகப் புகழ்பெற்ற இலக்கியப் பன்மொழித் திரைப்பட விழா!
யாழ்ப்பாணத் திரைப்படக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சிறப்புப் பன்மொழித் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது இன்று (24-06-2026) ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ச்சியாக, ஜூன் 30 ஆம் திகதி வரை வாரம் முழுவதும் கந்தர்மடத்தில் உள்ள எங்கட புத்தகங்கள் இல்லம் (இல. 18/2, அம்மன் வீதி) நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலின்படி, தொடக்க நாளான இன்று (24-06-2026) புதன்கிழமை பிற்பகல் 3:30 மணிக்குச் சிறப்பு உரை நிகழ்வு அரங்கேறவிருக்கிறது.
இதையடுத்து விழாவின் அடுத்தடுத்த நாட்களில் 30 ஆம் திகதி வரை உலகத்தரம் வாய்ந்த நாவல்களின் திரைவடிவங்கள் வரிசையாகத் திரையிடப்படவுள்ளன.
உலக இலக்கியங்கள் எவ்வாறு செழுமையான காட்சிகளாகத் திரையில் மாற்றப்பட்டுள்ளன என்பதை நேரில் கண்டு ரசிக்கச் சினிமா மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திரைப்பட ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இதற்கான அனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |