அனுர குமார படைத்த சாதனை : எதிரணி எம்.பி கிண்டல்
நாட்டின் உயர் நீதிமன்றங்களுக்கு எட்டு நீதிபதிகளை நியமிக்காமல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒரு சாதனை படைத்துள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது அனுரவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். சட்டத்தின் ஆட்சி இல்லாத நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை.
சட்டத்தின் ஆட்சி இல்லாத நாட்டிற்கு முதலீடுகள் வருவதில்லை
வரிகள் செலுத்த முடிந்தாலும், சட்டத்தின் ஆட்சி இல்லாத நாட்டிற்கு முதலீடுகள் வருவதில்லை. மேலும், முதலீடுகள் தக்கவைக்கப்படுவதும் இல்லை.

தேர்தல் அறிக்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் ஆட்சி முறையை நிறுவி, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டபோதிலும், ஆளும் கட்சி உறுப்பினர் எவரும் இன்றுவரை அதுபற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |