கடல் அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி
இலங்கையின் வெலிகம பகுதியில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 21 வயதுடைய துனிசிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (08) அன்று வெலிகம, பரண கடே கடற்கரைப் பகுதியில் துனிசிய நண்பர்கள் குழுவுடன் இவர் அலைச்சறுக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று மற்றும் கடலின் வலுவான நீரோட்டத்தில் சிக்கிக் காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணை
இதனைத் தொடர்ந்து காவல்துறை உயிர்காப்பாளர்கள், கடலோரக் காவல் படையினர் மற்றும் தனியார் மூழ்காளர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (09) காலை அதே கடற்கரைப் பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |