ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை : வலியுறுத்தும் சமுக ஆர்வலர்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்காக நௌஃபர் மௌமலாவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுதத்த திலகசிறி கூறியுள்ளார்.
தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் காவல்துறை மா அதிபர் புஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போதைய தீர்ப்பின் மூலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பேரும், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அந்தத் தண்டனைகளைப் பெற்றுள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்ப்புடன் ஈஸ்டர் தாக்குதல்களின் கதை முடிந்துவிடவில்லை
எனவே, ஈஸ்டர் தாக்குதல்களின் கதை இந்தத் தீர்ப்புடன் முடிந்துவிடவில்லை என்றும், தாக்குதலை வழிநடத்தி, திட்டமிட்டு, அரங்கேற்றிய உண்மையான சூத்திரதாரிகள் உட்பட சதிகாரர்களின் பட்டியல் இன்னும் வெளிவர வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |