ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேகநபர் அல்ல - மொஹமட் இப்ராஹிம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையும் பிரபல வாசனைப் பொருள் வர்த்தகருமான மொஹமட் இப்ராஹிம், தான் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சந்தேகநபர் அல்ல என தெரிவித்துள்ளார்.
இணையவழி ஊடக சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ள அவர், வர்த்தகராக கிறிஸ்தவ சமூகத்துடன் பல ஆண்டுகளாக நல்லுறவைப் பேணி வந்ததாகவும் கூறியுள்ளார்.
மொஹமட் இப்ராஹிம்
மேலும், பௌத்த ஆலயங்களில் தூபிகள் மற்றும் பிரசங்க மண்டபங்களை அமைப்பதற்கும், பௌத்த பிக்குகளின் கல்விக்காக புலமைப்பரிசில்களை வழங்குவதற்கும் தான் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாடசாலை செல்லும் வயதுடைய தனது இளைய மகன் தொடர்ந்தும் விளக்கமறியலில் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ள மொஹமட் இப்ராஹிம், இந்த விடயம் தொடர்பில் தான் மிகுந்த கவலையுடனும் மன உளைச்சலுடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் (ஏப்ரல் 2019), தனது மகன்களின் பயங்கரவாதத் திட்டங்களுக்கு உதவினார் மற்றும் தாக்குதல் விபரங்களை மறைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சுமார் 3 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, 2022 மே மாதத்தில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளுடன் இவருக்கு பிணை வழங்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |