தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் போராட்டம்! பொது மக்களுக்கு அழைப்பு
தியாகதீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபனின் நினைவை முன்னிறுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 2026 செப்டம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
யாழ். பல்கலை மாணவர் சமூகம்
இந்நிகழ்வில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

மாணவர் சமூகத்தின் அறிவிப்பில், திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் அவரது தியாகத்தையும் நினைவுகூரும் வகையிலேயே இந்த அடையாளப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |