அரசியல் அழுத்தத்தாலும் பாரபட்சத்தாலும் முடக்கப்பட்ட மாகாண அதிபர் நியமனங்கள்
2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக்குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்றுவரை கடமையேற்க்கமுடியாமல் பல அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரிற்க்கு கடிதம் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மூலம் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அக்கடிதத்தில் "தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு, வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 2023.12.15 ஆந் திகதி தொடக்கம் பல்வேறு திகதிகளில் இடநிலைப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 11 (பதவிகளுக்கு நியமித்தல்) இன் உப பிரிவு 3 இல் குறிப்பிட்டுள்ள சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
சேவை மூப்பு மற்றும் திறமை
எனிறும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முற்றாகப் புறந்தள்ளி - சேவை மூப்பு மற்றும் திறமை கருத்தில் கொள்ளாமல் மேற்படி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், அதிபராக, பிரதி அதிபராக, உதவி அதிபராக எழுந்தமானமாகவும், பாரபட்சமாகவும் குறித்த இடநிலைப்படுத்தல் நடைமுறைப்படுத்தமை குறித்தும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், சேவை மூப்பு மற்றும் திறமை கூடியவர்களை அதிபராக நியமிக்காமல் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளதன் மூலம், அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பை மீறுவது மட்டுமல்லாமல், பாரபட்சங்கள், தலையீடுகள் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை தோல்வி அடையச் செய்யும் செயற்பாடாகவும் சந்தேகிக்கின்றோம் எனவும் அவர்கள் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |