ஈரான் மீதான் தடை நீக்கம் : உலக சந்தையில் தொடர்ந்து குறைவடையும் கச்சா எண்ணெய் விலை
ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை மீது அமெரிக்கா விதித்திருந்த தடைகளை தற்காலிகமாக நீக்கியதால், உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை இன்று மேலும் சரிந்தது.
உலக கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பரல் WTI கச்சா எண்ணெயின் விலை இன்று 73.67 அமெரிக்க டொலராகவும், ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 77.54 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
ஈரான் மீதான தடை நீ்க்கம்
கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் அமெரிக்க டொலரில் கச்சா எண்ணெய் விற்பனை, அத்துடன் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை அமெரிக்க டொலரில் விற்பனை செய்வது ஆகியவற்றின் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள், ஓகஸ்ட் 21 வரை 60 நாட்களுக்குப் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன.

தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், அமெரிக்காவால் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கவும் முடியும். 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு முதன்முறையாக இத்தகைய தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், இது பல தசாப்தங்களாக ஈரான் மீது சுமத்தப்பட்டிருந்த அழுத்தத்தை அகற்றும் என்றும் கூறப்படுகிறது.
ஈரானுக்கு கிடைக்கப்போகும் பில்லியன் டொலர் வருவாய்
தடைகள் நீக்கப்படுவதால், வளைகுடா கடலில் தேங்கியுள்ள 67 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் விற்க முடியும். இதன் மூலம் மட்டும் ஈரான் 8 முதல் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருவாய் ஈட்டும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்தத் தற்காலிகத் தடை நீக்கம், எண்ணெய் ஏற்றுமதி மூலம் ஈரானுக்குப் பல பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைக் கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |