சீன கைத்துப்பாக்கியுடன் ஓய்வு பெற்ற படைச்சிப்பாய் கைது
Sri Lanka Army
Sri Lanka Police
China
By Sumithiran
சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி,மற்றும் 11 தோட்டாக்கள் ,மகசீன் ஒன்றை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜாங்கனை எகாவல்துறையினர் தெரிவித்தனர்.
யாயா 15, பஹல்மரகஹேவாவில் வசிக்கும் 42 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜாங்கனை காவல் நிலைய தலைமை ஆய்வாளர் ஜி.டபிள்யூ.எஸ். கஜசிங்கவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி