ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை
ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தலங்கம பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று (12) கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முன்னர் அரச அச்சுத்துறையில் பணியாற்றியவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோத்தகராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், அவரது வீட்டின் மேல் தளம் பல தனி நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், அசாதாரண சத்தம் கேட்டதும் வாடகைக்கு இருந்தவர்கள் கீழே ஓடி வந்துள்ளனர்.

ஆனால், வீட்டு உரிமையாளரின் உடல் மட்டுமே கிடந்துள்ளது. கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |