ஓய்வுபெற்ற இரு மடங்கு ஆசிரியர்கள் - அரசாங்கம் மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கை!
வழமையான விகிதத்தை விட கடந்த வருடம் இரண்டு மடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளமையே ஆசிரியர் பற்றாக்குறைக்கு பிரதான கரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் 5,000 அல்லது 6,000 ஆசிரியர்களே ஒய்வு பெறுவார்கள். ஆனால் சென்ற வருடம் இந்த எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது.
இதன் காரணமாகவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஆசிரியர் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்வதற்காக கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
குறித்த ஆசிரியர்கள் தேசிய பாடசாலை மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் பணிபுரிகின்றனர்.
இதற்கு மேலதிகமாக, 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளோம்.
தடையுத்தரவு

இதற்கு அரச சேவையில் உதவியாளர்களாக பணியாற்றியவர்களும் விண்ணப்பித்துள்ளார்கள்.
அவர்களை இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் பரீட்சை எழுதி ஆசிரியர் நியமனத்திற்குள் உள்வாங்கப்படலாம்.
இருப்பினும், இது தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தடை நீக்கப்பட்டதும் பரீட்சைகள் நடத்தப்பட்டு மேலும் பலரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இதவேளை, ஆறாயிரம் பட்டதாரிகளை குறிப்பிட்ட பாடங்களுக்காக தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும், மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்.