ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் செய்த இழிவான செயல்
திருகோணமலை, கோமரங்கடவல -அடம்பன பகுதியில் 08 ஆம் தர பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சந்தேகநபர், சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
வைத்திய பரிசோதனை
இந்நிலையில் குறித்த மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனனர்.

தொடர்புடைய மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கோமரங்கடவல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |