பதவி விலகினாரா உதய கம்மன்பில?? - இணைப்பேச்சாளர் வெளியிட்ட தகவல்
Press Meet
Udaya Gammanpila
Ramesh Pathrana
SriLanaka
By Chanakyan
அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதவியிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) விலகவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரான பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathrana) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
இதன்போது தற்போது அமைச்சர் உதய கம்மன்பில ஏன் பங்கேற்பதில்லை, அவர் பதவி விலகிவிட்டாரா என ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.