ஆசிரியர்களின் ஓய்வால் ஏற்பட்டுள்ள சவால் - கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Teacher’s Day
By Sumithiran
பெருமளவிலான ஆசிரியர்கள் ஒரேயடியாக ஓய்வு பெறுவது இந்த நாட்டின் கல்வித்துறைக்கு சவாலாக மாறியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 4,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற போதிலும், இந்த ஆண்டு 10,000 முதல் 12,000 வரையிலான ஆசிரியர்கள் அரசாங்க ஊழியர்களை 60 வயதில் ஓய்வுபெறச் செய்ததன் காரணமாக ஓய்வு பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வெற்றிடங்களை நிரப்புவது கட்டாயம்
எதிர்வரும் 03 மாதங்களில் வெற்றிடங்களை நிரப்புவது கட்டாயம் எனவும், எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்