நகையை மீட்க பணமில்லை - வங்கிகள் வசமாகும் தங்க நகைகள்: மக்களின் அவலநிலை
மக்கள் தங்களது தங்க நகைகளை அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்க முடியாமல் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாதாந்தம் குறைந்தபட்சம் 94,945 ரூபாய் தேவைப்படும் நிலையில், சராசரி வருமானம் 75,882 ரூபாயாகவே உள்ளதாகக் குறிப்பிட்டார்.
வருமானப் பற்றாக்குறை
இந்த வருமானப் பற்றாக்குறையைச் சமாளிக்க மக்கள் கடன் பெறுவதுடன், உணவு மற்றும் மருந்துகளை வாங்குவதற்காகத் தங்க நகைகளையும் அடகு வைக்கின்றனர்.

உரிய காலத்தில் கடனைச் செலுத்த முடியாததால், அந்த நகைகள் வங்கிகளுக்குச் சொந்தமாகி ஏலத்தில் விற்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடி மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு நடைமுறைச் சாத்தியமான நலன்புரித் திட்டங்கள் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |