முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீளாய்வுக் கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டுக்கான மீளாய்வு முன்னேற்ற கூட்டம் மேலதிக மாவட்ட செயலாளர் திரு.சி.குணபாலன் தலைமையில் இன்று (12) காலை 9.30மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு அரச சார்பற்ற நிறுவனங்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால திட்டங்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் முன்னேற்றங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் என்பவை பற்றி கலந்துரையாடப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.க.ஜெயபவானி, பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.