அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தத்தில் மாற்றமில்லை: பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்காலிகமாக எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை தொடர்ந்து நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்திய அவர், களத்தில் நிலவும் இராணுவ நகர்வுகள் எவ்விதத்திலும் இந்த ஒப்பந்தத்தைப் பாதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் ஏற்றுமதி
இருப்பினும், ஈரானிய எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் அமெரிக்கக் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு சந்தேகத்திற்குரிய கப்பல்கள் மறிக்கப்பட்டுச் சோதனையிடப்படுகின்றன.

ஈரான் ஒரு முறையான மற்றும் ஒருங்கிணைந்த பதிலை அளிக்கும் வரை தற்போதைய போர்நிறுத்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் நேரடி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழலே நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |