தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு..! கால அட்டவணையில் ஏற்படவுள்ள திருத்தம்
ஒக்டோபர் 20ஆம் திகதி முதல் கடலோரப் ரயில் பாதையின் தொடருந்து கால அட்டவணையில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கரையோரப் தொடருந்து பாதையின் ரயில் கால அட்டவணையை திருத்தியமைக்க தொடருந்து திணைக்களம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த நிலையில், பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல், புதிய திருத்தங்களின்படி, தற்போதைய தொடருந்து இயக்க நேரத்தை விட, 10 நிமிடங்களுக்கு முன்னதாக தொடருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ரயில் பயணச்சீட்டுகள் பிரச்சினை
அதேவேளை, புதிய கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ள தொடருந்து பயணச்சீட்டுகள் வழங்கப்படாமையால் ரயில்வே திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கான பொறுப்பை தமது சங்கம் ஏற்றுக்கொள்ளாது என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
