அரிசி இறக்குமதி நிறுத்தப்படும் : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அரிசிக்கு(rice) விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்காவிட்டால், அரிசி இறக்குமதியை நிறுத்த வேண்டியிருக்கும் என அரிசி இறக்குமதியாளர்கள் அரசுக்கு எச்சரித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் அல்லது இறக்குமதி வரியை 50 ரூபாவாக குறைக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிலோ ஒன்றுக்கு ஏற்படும் நட்டம்
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 65 ரூபா வரி காரணமாக, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதில் கிலோ ஒன்றுக்கு சுமார் பதினைந்து ரூபா நட்டம் ஏற்படுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சந்தைக்கு விடப்படாத அரிசி
இதன் காரணமாக சில இறக்குமதியாளர்கள் இன்னும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு வெளியிடவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இதுவரை 5000 மெட்ரிக் தொன்களுக்கு மேல் இந்தியாவில்(india) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
