இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர்
இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா, 6 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை (18) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர் குறித்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு
அவரது இலங்கை விஜயத்தின் போது அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இலங்கை விஜயத்தின் போது கொழும்பு துறைமுக நகரத்துக்கும் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா விஜயம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |