அவசரமாக ரத்து செய்யப்பட்டுள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸின் விமானங்கள்!
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் (SriLankan Airlines) பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இன்று (02) இயக்கப்படவிருந்த விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
விமான சேவை
இந்தநிலையில், கொழும்பில் இருந்து துபாய் (UL225/226), தோஹா (UL217/218), தம்மாம் (UL253/254), ரியாத் (UL265/266) மற்றும் குவைத் (UL229/230) ஆகிய நகரங்களுக்கான இருவழி விமான சேவைகளும் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயண முகவர்கள்
பயணிகள் மேலதிக விபரங்களுக்கு இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தையும் மற்றும் சர்வதேச அளவில் +94 11 777 1979 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ளலாம்.

அத்துடன் +94 74 444 1979 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் அல்லது www.srilankan.com என்ற இணையதளம் ஊடாகவும் தற்போதைய நிலவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
பயணிகள் தத்தமது பயண முகவர்களையும் தொடர்புகொண்டு மாற்று ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறியுமாறு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |