பிரித்தானியாவில் கடலின் மடியில் குழுமத்தின் நூல் வெளியீட்டு விழா...!

Sri Lankan Tamils United Kingdom
By Shalini Balachandran Mar 02, 2026 01:26 PM GMT
Report

கடலில் கரைந்துவிட்ட காலங்களும்... வரலாற்றில் தடம் பதித்துவிட்ட நினைவுகளும்- பாகம் 01 என்னும் உண்மைச் சம்பவங்களை அடக்கிய நூல் வெளியீடு 01.03.2026 அன்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவின் Alperton Community School மண்டபத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் சார் விநியோகத்தில் கடற்புலிகளின் ஆழக் கடலோடிகளாக செயற்பாட்டு, தாயகத்தின் விடுதலைக்கான பணியில் ஈடுபட்ட போது, தான் சந்தித்த பட்டறிவுகளின் தொகுப்பாக ஆசிரியரான எஸ்.கே அவர்கள் இந்த நூலினை எழுதியிருந்தார்.

கடலின் மடியில் குழுமத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச் சுடரினை, 2ம் லெப்.மலர் அவர்களின் சகோதரரும் பிரித்தானியா வீரத்தமிழர் முன்னணியின் ஒருங்கிணைபாளருமான திரு.கதிர்காம நாதன் அவர்கள் ஏற்றி வைக்க, பிரித்தானியாவின் தேசியக் கொடியினை அகேனம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.கிருபன் அவர்கள் ஏற்றினார்.

தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவு பொறுப்பாளர் திரு.மனோஜ் அவர்கள் ஏற்ற, பொது மாவீரருக்கான திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடரினை லெப். கேணல் அசோக்குமார் (யோகராஜா குமரேந்திரன்) ஏற்றினர். தொடர்ந்து மலர் மாலையினை திருமதி கவிதா அவர்கள் அணிவித்தார்.

அக வணக்கத்தினை தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பொது மாவீரருக்கான திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம் செய்தனர்.

நல்லை குமரன் நர்த்தனாலயா நடனபள்ளி ஆசிரியர் திருமதி சிவானந்த லாலா கேதீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் நர்த்தனாலயா மாணவிகளான செல்விகள் வெண்பா, அரிகா, அஸ்வன்யா, அந்துஷா, சர்வீனா, வர்ஷா, சாதனா, விவேகா, சஞ்சனா, அஜிரா, கிஷானி, சரபை, ஆகியோர் பங்கு கொண்ட எழுச்சி நடனம் நடைபெற்றது.

தொடர்ந்து தமிழீழ எழுச்சி பாடலினை திரு.தமிழ் அவர்கள் வழங்க, நூல் வெளியீட்டுக்கான நோக்க உரை நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினால் வழங்கப்பட்டது.

இன்றைய நாளின் பிரதான நிகழ்வான நூல் வெளியீட்டினை நூலாசிரியர் "எஸ்.கே" அவர்களின் புதல்விகளான செல்வி இந்து அவர்களும், செல்வி நிலா அவர்களும் வெளியிட்டு வைக்க, முதல் பிரதியினை திரு.ஜெயராஜ் ஜெயகாந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சிறப்பு பிரதிகளை தமிழீழ மருத்துவப் பிரிவு பொறுப்பாளர் திரு.மனோஜ் அவர்கள் வெளியிட்டு வைக்க, ஆழக்கடலோடியும் லெப்.கேணல் குமராப்பா அவர்களின் சகோதரருமான திரு.பாலன், திரு.பாலா மாஸ்டர், திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம், திரு. கிருபன், திரு. ஜீவன், திரு. சிறிமுருகன், திரு. கதிர்காமநாதன், கேணல் ராயு (குயிலன்) அவர்களின் சகோதரர் திரு. சத்தியநாதன், திரு. சதீஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சிறப்பு பிரதிகளை திரு.பாலா மாஸ்டர் திரு.முகுந்தன் ஆகியோர் வழங்கி வைத்தனர். நிகழ்வில் வெளியீட்டு உரையினை தமிழீழ வைப்பகத்தின் ஆளுகை மேலாளரும், அரசியல் ஆலோசகருமான திரு.பாலா மாஸ்டர் வழங்க, ஏற்புரையினை தமிழீழ மருத்துவப் பிரிவு மருத்துவப் போராளி திரு.பொழிலன் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து சிறப்புரையினை தமிழீழ விளையாட்டு துறையின் பிரிவு பொறுப்பாளர் போராளி திரு.இன்பன் மாஸ்டர் அவர்கள் வழங்கினார்

. நன்றியுரையினை தொடர்ந்து, உறுதி ஏற்பு நடைபெற்று தேசியக் கொடிகள் கையேற்க்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் உட்பட பல முன்னாள் ஆண், பெண் போராளிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சம நேரத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் இந்நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நூல் வெளியீட்டின் பிரதான நிகழ்வு சுவிட்சர்லாந்து மண்ணிலும், மற்றும் அவுஸ்திரேலியா, கனடா, ஜெர்மன், மலேசியா ஆகிய நாடுகளிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்


🛑YOU MAY LIKE THIS...! 👇🏻


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்