பெங்களூரில் பிரபல உணவகத்தில் மசால் தோசை உண்ணும் ரிஷி சுனக்
பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரிட்டன் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகங்களில் ஒன்று வித்யார்த்தி பவன். உணவு விரும்பிகளுக்கு மத்தியில் மிகவும் புகழ்பெற்ற இந்த உணவகம் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.
வித்யார்த்தி பவனில் மசால் தோசை சாப்பிடும் ரிஷி சுனக்
#RishiSunak is going to become the next PM of UK.
— Vidyarthi Bhavan (@VidyarthiBhavan) October 24, 2022
Happy to know that he will be the first Indian-origin & the youngest British Prime Minister.
We wish him good luck & may he become the most successful PM of UK by sailing through all the turbulence pic.twitter.com/JhWLtcVTu2
இந்நிலையில், இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், வித்யார்த்தி பவனில் மசால் தோசை சாப்பிடும் பழைய புகைப்படம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் இந்த புகைப்படத்தை வித்யார்த்தி பவன் உணவகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.
பெங்களூருவின் பெருமைமிகு மருமகன்
இருப்பினும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், பெங்களூரு மக்கள் ரிஷி சுனக்கின் Throwback புகைப்படங்களை பகிர்ந்து 'பெங்களூருவின் பெருமைமிகு மருமகன்' என சமுக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.