பொருட்கள் விலை உயர்வு,தட்டுப்பாடு - ஏற்றுக்கொண்டது அரசாங்கம்
இலங்கையில் அண்மைய நாட்களில் எரிவாயு, அரிசி, சீனி, பால்மா மற்றும் சிமெந்து ஆகிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையும் மற்றும் விலைவாசி அதிகரித்துள்ளதனையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண(Lasantha Alagiyawanna) இதனை தெரிவித்தார்.
எனினும் தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பால் மா மற்றும் சிமெந்து தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த இரண்டு பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
