மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!!
சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது.
ஆனால் அதுதான் உண்மை.
மட்டக்களப்பு (Batticaloa) மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர்.
ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது.
எப்படி என்று பார்ப்போம்.
'யாழ்ப்பாணத்தில் (jaffna) இம்முறை சுமந்திரனை தோற்கடித்தே தீருவது' என்று கங்கணம் கட்டி நின்றுகொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள். வாக்குகளின் அடிப்படையில் இம்முறை சுமந்திரன் வெல்லுவது என்பது மிக மிகக் கடினம் என்றுதான் பலரும் கூறுகின்றார்கள்.
ஆனால் அவர் தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியும்.
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்துக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒவ்வொரு வாக்கும் சுமந்திரனின் என்கின்ற தமிழ் மக்கள் பெரிதாக விரும்பாத ஒரு நபரை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் அனுப்பி விடக்கூடிய அபாயத்துக்கு வித்திட்டுவிடும்.
ஒரு கட்சியின் தேசியப் பட்டியல் நியமணம் என்பது, ஒரு கட்சிக்கு இலங்கை முழுவதும் விழக்கூடிய ஒட்டுமொத்த வாக்குகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஆசனம். அதனால் அந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் சுமந்திரன் தெரிவாகுவதற்கு சாத்தியம் இருக்கின்றது.
உதாரணத்திற்கு, வீட்டுச் சின்னத்தில் போட்டியிரும் எந்த ஒரு வேட்பாளருக்கும் நீங்கள் அம்பாறையில் வாக்களித்தாலும் சரி, மட்டக்களப்பில் வாக்களித்தாலும் சரி, யாழ்ப்பாணத்தில் வாக்களித்தாலும் சரி, சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதற்கு மறைமுகமாக நீங்கள் வாக்களிக்கின்றீர்கள் என்பது தான் உண்மை.
எனவே சுமந்திரன் இம்முறை தமிழ் மக்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றம் செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுகின்ற எந்த ஒரு வேட்பாளரையும் நீங்கள் ஆதரிக்க முடியாது என்பதுதான் சமன்பாடு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |