உலகிலேயே ஒரு நதி கூட இல்லாத நாடு எது தெரியுமா..!
இயற்கையால் உருவாக்கப்பட்ட இந்தப்பூவுலகில் எண்ணிலடங்கா அதிசயங்கள் இருப்பது நாம் அறிந்ததே, அப்படிப்பார்க்கையில் இந்த உலகிலே ஒரு நதி கூட இல்லாத நாடொன்று உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
அந்த நாட்டிலே ஏன் நதிகள் இல்லை அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விடயங்களை தெரிந்து கொள்வோம்.
அந்த நாட்டின் பெயர் சவுதி அரேபியா, அங்கு நதியோ ஏரியோ இல்லை, சவுதி அரேபியா பெரும்பாலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதி தண்ணீருக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.
நிலத்தடி நீர்
சவுதி அரேபியாவில் ஆறுகள் இல்லை என்றாலும், இந்த நாடு இரண்டு கடல்களால் சூழப்பட்டுள்ளது. அதன் மேற்கில் செங்கடலாலும் கிழக்கில் இது பாரசீக வளைகுடாவாலும் சூழப்பட்டுள்ளது, இந்த இரண்டு கடல்களுமே சவுதி அரேபியாவின் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகிறது.
இந்த நாட்டில் ஆறுகள் இல்லாததால் ,இங்கு கிணறுகள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், சவுதியின் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளதாக தெரியவில்லை.
அதனால் தான் அந்நாட்டு மக்கள் கடல் நீரை சுத்திகரித்து குடிப்பதற்கு பயன்படுத்தி வருகிறார்கள். இது இந்த நாட்டில் மிகவும் விலை உயர்ந்ததாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |