பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்
Ampara
Sri Lanka
Accident
By Shalini Balachandran
அம்பாறையில் (Ampara) பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது அம்பாறை 9மாவட்டம் சாய்ந்தமருது காவல் பிரிவிற்குட்பட்ட அல்ஹிலால் பாடசாலை முன்பாக இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, இந்த விபத்ததானது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுள்ளமையினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த சம்மாந்துறை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது போக்குவரத்து பொறுப்பதிகாரி தலைமையில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்