நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்! சம்பவ இடத்திலேயே பலியான இளம் யுவதி
Kandy
Accident
Death
By Shalini Balachandran
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது கண்டி மினிப்பே பிரதேசத்தில் நேற்று(13) மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த உயிரிழந்த யுவதி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதியில் எதிரே வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளார்.
கோர விபத்து
இந்தக் கோர விபத்தில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த மேலும் இரண்டு பெண்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்