நல்லூரில் வீதித்தடை : மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை
Nallur Kandaswamy Kovil
Hinduism
By Vanan
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணிவரையும் ஆலய சுற்று வீதி தடைசெய்யப்படவுள்ளது.
மாற்றுப் பாதை
பொது மக்கள் வீதியைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதைகளை வழமைபோல் பயன்படுத்துமாறு மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி