மீண்டும் அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை ..!
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி என்பவற்றுக்கு பெறுமதிசேர் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அந்த வருடம் விதிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 18% பெறுமதிசேர் வரிக்கு நிகராக இந்த வரி அறவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வரி அதிகரிக்கப்படுவதால் பெட்ரோல், டீசல் விலை 10% அதிகரிக்கலாம் என்று சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
முன்மொழிவுகள்
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அரசாங்க வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனதன் காரணமாக அடுத்த வருடம் 2024 முதல் பெறுமதிசேர் வரியை 18% ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது இந்த பெறுமதிசேர் வரி விதிக்கப்படவில்லை, மேலும் இந்த முன்மொழிவுகளின்படி பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது இந்த வரியை விதிக்க நிதி அமைச்சசு முன்மொழிந்துள்ளது.
பிரேரணை
மண்ணெண்ணெய்க்கு இந்த வரி அறவிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் “கோப்” குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணையை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்புவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.