இரும்பு வேலிகளால் முடங்கிய கொழும்பின் பிரதான வீதிகள்!!(காணொளி)
இரண்டாம் இணைப்பு
பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. “இளைஞர்களின் கனவுகளுக்கு இறுதி ஊர்வலம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வீதியெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முதலாம் இணைப்பு
கொழும்பு நகரில் முக்கியமான இடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளடங்கும் வகையில் இன்று முற்பகல் காவல்துறையினர் வீதி தடைகளை அமைத்துள்ளனர்.
இரும்பு குழாய்களை பயன்படுத்தி, வீதிகளில் புதைத்து, நிரந்தர வீதி தடைகளை போல் அவற்றை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.
கொழும்பு கோட்டையை சூழவுள்ள பகுதிகள், அரச தலைவர் மாளிகைக்கு அருகில் பல இடங்களில் இவ்வாறு நிரந்தரமான வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிகளில் வருவோர் இந்த பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.









