வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படவுள்ள புதிய விதிமுறை! வெளியாகியுள்ள தகவல்
எதிர்காலத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வீதித் தகுதிச் சான்றிதழ் பெறுவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் என்றும், உலகின் வளர்ந்த நாடுகளிலும் அவை கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் சான்றிதழ் இல்லாத வாகனம் வீதியில் செலுத்த அனுமதிக்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, வணிக வாகனங்களுக்கு தற்போது தேவைப்படும் பௌதீக தகுதிச் சான்றிதழ் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டு, அனைத்து வாகனங்களுக்கும் தேவைப்படும் உமிழ்வுச் சான்றிதழுடன் இணைத்து இந்த வீதி தகுதிச் சான்றிதழ் ஒரே இடத்திலிருந்து வழங்கப்படும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பப் பணிகள்
இது மிகவும் சிக்கலான மற்றும் விரிவான திட்டம் என்பதால், கவனமாக ஆராயந்து அடுத்த ஆண்டு முதல் அதன் ஆரம்பப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உமிழ்வுச் சான்றிதழ்கள் வழங்குவதற்கான தற்போதைய முறை 2027 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருப்பதால், புதிய முறை இன்னும் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2028 முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |