யாழில் ஆசிரியரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்தவர் கைது
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - நெல்லியடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரணவாய் பகுதியில் ஆசிரியர் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளை அடித்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி விசேட காவல்துறை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் மீசாலையைச் சேர்ந்த 24 வயதான குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
அத்துடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் வண்டியும், ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரையும், சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
