யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

Sri Lanka Police Colombo Jaffna Money
By Jaso Nov 14, 2023 06:10 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களின் ஒருதொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டாம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்தில் கோண்டாவிலைச் சேர்ந்த ஒரு குடும்பமும் ஆசனப்பதிவை மேற்கொண்டு பயணம் மேற்கொண்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் கனிய மணல் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் கனிய மணல் அகழ்வு

புத்தளத்தில் ஏறிய அறுவர்

பேருந்து புத்தளம் பகுதியை சென்றவேளை 4 பெண்கள் 2 ஆண்களுமாக 6 பேர் பேருந்தில் ஏறியிருந்தனர். இந்த நிலையில் கோண்டாவில் பகுதியிலிருந்து பயணித்தவர்களின் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பணம் மேற்கூறிய ஆறு பேர்கொண்ட குழுவினால் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் பேருந்தில் வைத்து களவாடப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி | Robbery Of People Traveling From Jaffna To Colombo

மேற்கூறிய பணத்தினை களவாடியவர்கள் ஐந்துலாம்பு சந்தியில் இறங்கிக் கொண்டதாக பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தெரிவித்திருந்தனர்.

100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!

100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!

நூதனமாக திருட்டு

பணத்தினை இழந்த குறித்த குடும்பத்தினர் கொழும்பு ஆமர்சீட் பகுதியில் இறங்க முற்படும்போதே குறித்த கும்பலில் பெண் ஒருவர் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கமராவினை தனது கை பையினால் மறைக்கும் போது மற்றைய பெண் கோண்டாவில் பகுதியிலிருந்து ஏறிய பெண்ணின் கைபையினுள் பணத்தினை திருடும் காட்சிகள் இரகசிய கண்காணிப்பு கமராவினுள் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி | Robbery Of People Traveling From Jaffna To Colombo

இதேவேளை குறித்த குடும்பத்தினருக்கு பேருந்து நடத்துனர் பணம் களவாடப்படுவதற்கு முன்பே எச்சரிக்கை ஒன்றையும் விடுத்திருந்ததாக பணத்தினை இழந்த குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் தடை விவகாரம்: நீதிபதி எடுத்த திடீர் முடிவு

இலங்கை கிரிக்கெட் தடை விவகாரம்: நீதிபதி எடுத்த திடீர் முடிவு

காவல் நிலையத்தில் முறைப்பாடு

பணத்தினை களவாடியவர்கள் முற்பதிவு செய்தே குறித்த பேருந்தில் பயணித்ததாகவும், அவர்கள் முற்பதிவு செய்ய அழைத்த தொலைபேசி இலக்கத்தையும் பணத்தை இழந்தவர்களிடம் பேருந்து நடத்துனர் வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சொகுசு பேருந்தில் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி | Robbery Of People Traveling From Jaffna To Colombo

  இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய கண்காணிப்பு கமரா மூலம் பெறப்பட்ட காணொளிகள் மற்றும் கிடைக்கப்பெற்ற தொலைபேசி எண் என்பனவற்றை வைத்து கொழும்பு கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ராஜபக்சக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்