100 இற்கும் அதிகமான ஐ. நா அதிகாரிகளை காவு வாங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர்!
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இடம்பெறும் போர் காரணமாக உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
உலகில் இதுவரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பலி எண்ணிக்கை
ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை இரு தரப்பிலும் இடம்பெற்ற பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மருத்துவமனைகளில் தஞ்சம்
இந்நிலையில் காசா பகுதி மீதி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருவதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளுக்கு நாள் உக்கிரமடையும் இந்தப்போரில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகின்றது.