52 வயது பெண்ணை தகாத முறைக்கு உட்படுத்தி ஆயிரக்கணக்கில் கொள்ளை!
ஹம்பேகமுவ காவல்துறை பிரிவுக்கு உபட்ட தஹய்யாகல பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவரை தகாத முறைக்குட்படுத்தி அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவ தினத்துக்கு முன்னைய தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அயல் வீட்டில் நபரொருவர் இந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு, அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் பெண் இரவு உறங்கச் சென்றபோது, வீட்டுக்கு வெளியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ள நிலையில் அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபரொருவர் அவரை தகாத முறைக்குட்படுத்தியுள்ளார்.
50 ஆயிரம் ரூபா கொள்ளை
அத்துடன் சந்தேக நபர் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அயல் வீட்டு உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |