பெண்களின் நகையை வினோத முறையில் கொள்ளையிடும் கும்பல் கைது!
Sri Lanka Police
Crime
By pavan
தனியாக செல்லும் பெண்களின் முகங்களில் மிளகாய்த் தூளை வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முச்சக்கரவண்டிகள் இரண்டும் களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்த காவல்துறையினர் , இவர்கள், களுத்துறை, பன்விலாஹேனவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்