விமான நிலையத்தின் மீது ரொக்கட் தாக்குதல்! பலப்படுத்தப்பட்ட கந்தஹார் விமான நிலையத்தின் பாதுகாப்பு
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்தை இலக்குவைத்து நேற்றிரவு ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நேற்றிரவு விமான நிலைய வளாகத்தக்குள் அடுத்தடுத்து 3 ரொக்கட்டுக்கள் விழுந்து வெடித்தன. அவற்றில் ஒன்று ஓடுபாதையில் விழுந்து வெடித்தது.
இந்தத் தாக்குதல்களை அடுத்து அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கந்தஹார் விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஹெராட், லஷ்கர் காஹ் மற்றும் கந்தஹார் பகுதிகளுக்குள் நுழைந்துள்ள தலிபான்கள் இந்நகரங்களை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களைத் தொடுத்துள்ள நிலையில் விமான நிலையத்தை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக காந்தஹார் நகாரத்தை நோக்கி பல முனைகளில் தலிபன்கள் முன்னேறி வருகின்றனர்.
இதேவேளை, தலிபான்களுக்கும் - அரச படைகளுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கந்தஹாரிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
அண்டை நாடுகளாக பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்குச் சென்று அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.