போலந்தில் பைடன் - எல்லை அருகே தாக்குதல்களை நடத்தும் ரஷ்யாவால் பரபரப்பு
attack
russia
ukraine
biden
poland
By Sumithiran
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து சென்றுள்ள நிலையில், அந்நாட்டுக்கு மிக அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்குள்ள அமெரிக்க வீரர்கள், நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் ஜோ பைடன் பேசினார்.
மேலும், போலந்து வந்துள்ள உக்ரைன் அமைச்சர்களுடன் அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், போலந்து நாட்டில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரைனின் லீவ் நகரில் ரஷ்யா தொடர்ந்து ரொக்கெட் தாக்குதலை நடத்தி வருகிறது. ரொக்கெட் தாக்குதலை தொடர்ந்து அந்த நகரின் ஒருசில பகுதிகளில் வெடிவிபத்துகளும் நடைபெற்றுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி