இஸ்ரேல் மீது பாய்ந்த ரொக்கட்! இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்ட தகவல்
Lebanon
Israel
Rockets
By Chanakyan
லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரொக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஏவப்பட்ட ரொக்கட்டுகளில் ஒன்றை இஸ்ரேலின் இரும்பு டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து நிறுத்தியது, இரண்டாவது ஏவுகணை கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு திறந்த பகுதியில் வீழ்ந்தாகவும் இஸ்ரேலின் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும் இஸ்ரேலை அனைத்து முனைகளிலும் பாதுகாக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இஸ்ரேலிய இராணுவம் ரொக்கட்டுகள் தெற்கு லெபனானில் ஒரு பாலஸ்தீனிய குழுவால் ஏவப்பட்டதாக நம்புகிறது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி